Anna wikipedia in tamil language

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழினுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.

அஃதே, நாட்டு நிறுவன தரவரிசை கட்டமைப்பு இதனை பத்தாவது இடத்தில் அமர்ந்திருக்கிறது. மேலும் பல்கலை கழக்கங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்திருகிறது. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியிற் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் மூன்று தொழில்நுட்ப துறைகளும் உள்ளடங்குவனவாகும். சென்னை தொழில்நுட்ப  நிறுவன வளாகம் குரோமேபேட்டையில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

உருவாக்கம்

[தொகு]

  • 1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-இல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாகப் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
  • பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.

மறுசீரமைப்பு

[தொகு]

  • 2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
  • 2007-ம் ஆண்டு: நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் கீழ்கண்டவாறு 6 பல்கலைகழகங்களாகச் செயல்பட்டு வந்தது:
  • 2007-ம் ஆண்டு: அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைக்கச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[3][4]
  • 2012-ம் ஆண்டு: ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைகழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.

வளாகம்

[தொகு]

பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம், தென்சென்னை பகுதியில் 100 ஏக்கர் (400,000 சதுர.மீ) பரப்பில் அமைந்துள்ளது. அடையாறும் தமிழக ஆளுனர் மாளிகையான ராஜ்பவனும் இவ்வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளன. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி அமைந்துள்ளன. மெட்ராசு தொழில்நுட்ப கழகம் 200,000 சதுர மீட்டர் பரப்பளவில் குரோம்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியின் சில ஆய்வுக்கூடங்கள் தரமணி வளாகத்தில் அமைந்துள்ளன. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள அறிவியல் மையம் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.

சேர்க்கை

[தொகு]

தமிழ்நாடு தொழில்முறைக்கல்வி படிப்புகள் நுழைவுத்தேர்வின் வழியாக தொழில்முறைகல்விக்கான மாணவர் சேர்க்கை 2006 வரை நடைமுறையில் இருந்தது. 2007-2008 கல்வி ஆண்டிலிருந்து மாணவர்கள் மேன்னிலை (12ஆம் வகுப்பு) கல்வியின் மதிப்பெண்கள் வாயிலாகச்  சேர்க்கைத்  தொடங்கி நடைமுறையில் உள்ளது. முதுகலை கல்வி சேர்க்கை TANCET மற்றும் GATE போன்ற நுழைவுத்தேர்வுகளின் மதிப்பெண்கள் கொண்டு நடத்தப்படுகிறது.

கல்வி

[தொகு]

தனது இணைப்பு கல்லூரிகள் வாயிலாக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியை வழங்கிவருகிறது. இது இரட்டை அமைப்பைச் சார்ந்ததாகும், அவ்வண்ணம் ஒரு கல்வி ஆண்டிற்கு இருமுறையாக - முதலாவது அரையாண்டு நவம்பர்-திசம்பர் மாதங்களிலும், இரண்டாவது அரையாண்டு மே-சூன் மாதங்களிலும் தேர்வுகள் நடைபெறும்.

தரவரிசை

[தொகு]

பன்னாட்டு வழியில், அண்ணா பல்கலைக்கழகம் கியூஎஸ் உலக பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியலில் 651-700 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே தரவரிசையில் ஆசியாவில் 301-350வதாகவும் மற்றும் பிரிக்ஸ் நாடுகளில் 85வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் வளாகங்களும்

[தொகு]

கீழ்க்காணும் பட்டியலில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் இருவகைப்படும் அவை:

  • அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் வளாகங்களும்
  • அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளும் வளாகங்களும்

புரிதலுக்காக இப்பட்டியல் பன் கிளையாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - தரமணி, சென்னை மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - மதுரை மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் மண்டலம்

அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்:

அண்ணா பல்கலைக்கழகம் - தரமணி சென்னை மண்டலம்:

அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்:

அண்ணா பல்கலைக்கழகம் - மதுரை மண்டலம்:

அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி மண்டலம்:

அண்ணா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் மண்டலம்:

இணைந்துள்ள கல்லூரிகள்

[தொகு]

அண்ணா பல்கலைக்கழகச் சீரமைப்பு விதி (The Anna University Amendment Act) 2001-இன் படி, ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இவற்றுள் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும் மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் 225 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

துணைக்கோள் மற்றும் தொலைக்காட்சி

[தொகு]

இ.வி.ஆ.நி. அண்ணா பழ்கலைக்கழகத்திற்கு தனியே தொலைக்காட்சி ஒளியலை வரிசை உருவாக்கிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. கழகம், தமிழ்நாட்டின் முதல் ஊடாடும் துணைக்கோள் முனையத்தை எடு சாட்-யின் கேயூ வரிசை கீழ் நிறுவியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுசாட் இந்திய தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மாணவர்களால் தயாரிக்கப்பட்ட முதல் துணைக்கோள் மற்றும் இ.வி.ஆ.நி. தவிர்த்து பிற நிறுவனங்கள் உருவாக்கி இயக்கும் முதல் இந்திய துணைக்கோள் அனுசாட் ஆகும். இது முதன்மை சேமிப்பு மற்றும் முன்னோக்கு தாங்காற்றலும், துணைவினை தொழில்நுட்ப செயல்முறைத் தாங்காற்றலும் கொண்டுள்ளது. இது முனைய துணைக்கோள் ஏவுகலம் C-12 உடன் 20 ஏப்ரல் 2009 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த துணைக்கோளின் உருவாக்கத்திற்கு இ.வி.ஆ.நி. துணைநின்றது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]

மதிப்பீடு முறை

[தொகு]

மற்ற பல்கலைக்கழகங்களைப் போன்றே இக்கழகத்திலும் மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட 'வரவுகள்' முறை பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடதிட்டத்திற்கும் 'வரவுகள்' (வழமையாக 1 முதல் 4) வழங்கப்படுகிறது. பட்டம் பெறுவதற்கு குறைந்தளவு 'வரவுகள்' வாங்கியிருக்க வேண்டும். இந்த அளவு பாடதிட்டம், துறை மற்றும் விருப்பத்தேர்வுகளைப் பொறுத்து அமையும். தர எண் சராசரி (GPA) 0 - 10 உள்ளாக அளவு கொண்டிருக்கும்.

கீழ்வரும் ஆங்கில எழுத்துக்கள் தர மதிப்பாக ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் வழங்கப்படுகிறது:

தர எழுத்து SABCDEUW
தர எண் 109876400

'U' பெற்றவர் பாடத்தில் தேறவில்லை என்பதையும் 'W' பாடதிட்டதிற்கு தேவையான வருகை இல்லை எனவும் குறிக்கும். இரண்டுக்குமே அவர் பாடதிட்டத்தில் தவறிவிட்டார் எனக் கொள்வர். தர எண் சராசரி, GPA, வரவுகளுக்கு சரியான எடை கொடுக்கப்பட்ட தர எண்ணிக்கைகளின் சராசரி.

இங்கு:

பிற தகவல்கள்

[தொகு]

  • இப்பல்கலைக்கழகம், 1978 முதல் 1982 வரை, "பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" என்று அழைக்கப்பட்டது. அதன் பின் தற்போதைய பெயருக்கு மாறியது.
  • அண்மையில், தேசிய அங்கீகாரக் குழு (National Accreditation Committee) அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 நட்சத்திர அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

  1. அண்ணா பல்கலை துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம். தினமலர். 10 ஆகத்து 2021.
  2. ↑அண்ணா பல்கலைக்கழகம் கோவைபரணிடப்பட்டது 2012-04-21 at the வந்தவழி இயந்திரம், பார்த்த நாள், 10, ஏப்ரல், 2012.
  3. ↑அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைக்கப்பட்டனபரணிடப்பட்டது 2012-09-27 at the வந்தவழி இயந்திரம், பார்த்த நாள், 10, ஏப்ரல், 2012.
  4. ↑த இந்து நாளிதழில் பரணிடப்பட்டது 2012-11-03 urge the வந்தவழி இயந்திரம், பார்த்த நாள், 10, ஏப்ரல், 2012.